செய்திகள்

1 கிலோ எடையிலான 639 ஆணிகளை விழுங்கிய அதிசய மனிதர்

Published On 2017-10-31 09:19 GMT   |   Update On 2017-10-31 09:19 GMT
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் பார்கனா மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் அருகிலுள்ள தனியார் நர்சிங் கோமில் எக்ஸ்ரே செய்து பார்த்த போது வயிற்றில் இரும்பு ஆணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவர் சின்சோபிரீனா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் சில காலமாக ஆணிகள் மற்றும் மணலை விழுங்கி உள்ளார். அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிகளை வெளியே எடுத்தோம்' என தெரிவித்தனர்.



அவர் வயிற்றில் இருந்த 1 கிலோ எடையிலுள்ள 639 ஆணிகள் அகற்றப்பட்டன. தற்சமயம் அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News