செய்திகள்

ஐதராபாத்: 16 வயது சிறுமியை மணந்த 77 வயது வெளிநாட்டு மாப்பிள்ளை கைது

Published On 2017-09-20 09:27 GMT   |   Update On 2017-09-20 09:27 GMT
5 லட்சம் ரூபாய்க்கு 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்த ஓமன் நாட்டை சேர்ந்த 77 வயது ஷேக்கை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்:

ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், இவரது தாயாரும் சேர்ந்து ஐதராபாத் காவல் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் அளித்தனர். ஓமன் நாட்டை சேர்ந்த 77 வயது ஷேக், எனது அத்தையிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

திருமணம் நடைபெற்றதன் சாட்சியாக இரு புகைப்படங்களையும் அவரது தாயார் கொடுத்தார். அதில், ஒரு புகைப்படத்தில் மணமகளுக்கான ஆடையில் சிறுமி காட்சி அளிப்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த காஜி வெள்ளையாகவும், சிறுமி கருப்பாகவும் தோற்றம் அளிக்கிறார்.

சிறுமியிடம் இருந்து புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி 77 வயது மாப்பிள்ளையை கைது செய்தனர்.

விசாரணையில், திருமணம் முடிந்ததும் ஷேக் மஸ்கட்டுக்கு திரும்பி செல்வார் என்பதும், சிறுமி ஓமன் நாட்டுக்கு வரும் வகையில் அங்கிருந்து விசா அனுப்பி வைக்க முடிவு செய்திருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், புரோக்கர்களின் உதவியுடன் ஷேக் போலி அடையாள அட்டைகளை பெற்றுள்ளார். ஐதராபாத்தில் உள்ள வீடுகளை விடுதிகளாக மாற்றி வருகின்றனர். இதில் வைத்து தான் ஷேக் திருமணம் செய்துள்ளார். இதைதொடர்ந்து அவரையும், அவருக்கு திருமணம் செய்து வைத்த மதகுருவையும் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News