செய்திகள்

மணிப்பூர்: 6 கிலோ தங்கம் கடத்தி வந்த கும்பல் இம்பால் விமான நிலையத்தில் கைது

Published On 2017-09-16 07:37 GMT   |   Update On 2017-09-16 07:37 GMT
மணிப்பூர் மாநிலத்தில் 6 கிலோ தங்கம் கடத்தி வந்த கும்பலை இம்பால் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இம்பால்:

மணிப்பூர் மாநிலம் தலைநகரான இம்பாலில் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து விமானநிலையப் பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அனைத்து பயணிகளின் உடமைகளும் வெகு துல்லியமாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த விமானங்களில்  6 பேர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 1.79 கோடி ரூபாய் மதிப்பிலான 36 கோல்ட் பிஸ்கடை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் எடை சுமார் 6 கிலோ ஆகும்.  

கடத்தலில் ஈடுபட்டவர்கள் 6 பேரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் தனித்தனி விமானங்களில் வந்துள்ளனர். மேலும் இவர்கள் தங்கத்தை கடத்தி வர மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளி யார்? என சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News