செய்திகள்

சொகுசு கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

Published On 2017-09-13 06:55 GMT   |   Update On 2017-09-13 06:55 GMT
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் சொகுசு கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் எல்லாப்பூரிலிருந்து சொகுசு காரில் சுமார் 10 பேர் அங்கோலா மாவட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் தாலுக்காவைச் சேர்ந்த அரபில்லு காட் பகுதியில் வைத்து ஏதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயமடைந்த ஒருவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் பெலாகவி மாவட்டம்  சிக்கோடி பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News