செய்திகள்

ஆதார் தீர்ப்பு குறித்து மத்திய மந்திரிகள் அமைதி காப்பது ஏன்? - உமர் அப்துல்லா கேள்வி

Published On 2017-08-24 10:25 GMT   |   Update On 2017-08-24 10:25 GMT
தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை? என உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர்:

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பிற்கு மத்திய மந்திரிகள் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், 'முத்தலாக் வழக்கின் தீர்ப்பிற்கு மத்திய மந்திரிகள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் ஆதார் அடையாள அட்டை தொடர்பான இந்த தீர்ப்பிற்கு மத்திய மந்திரிகள் ஆதரவு தெரிவித்து எந்த கருத்தும் கூறாதது ஏன்?’ என டுவிட் செய்துள்ளார்.

Tags:    

Similar News