செய்திகள்

புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் படிப்பில் மந்தமாகி விடுவார்கள்: ஆய்வில் தகவல்

Published On 2017-08-23 12:24 GMT   |   Update On 2017-08-23 12:24 GMT
புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் படிப்பில் பின் தங்கி இருப்பார்கள் என கேரளாவில் உள்ள பள்ளிகளில் எடுத்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 7500-க்கும் அதிகமான மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் புகையிலை பயன்படுத்துவது மற்ற போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு வழி வகுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே மனநல நோய்களுக்கு உள்ளாகின்றனர். வாழ்நாள் முழுவதும் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களில் 76.3 சதவீதம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைகின்றனர். மீதி 24.7 சதவீதம் மாணவர்கள் ஆண்டு தேர்வில் தோல்வியடைகின்றனர்.

மொத்தம் 6.9 சதவீதம் மாணவர்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்சமயம் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News