செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் பலி: 6 வாரங்களில் விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2017-08-18 09:07 GMT   |   Update On 2017-08-18 09:07 GMT
கோரக்பூர் மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மாநில அரசின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு மனுதாரரை கேட்டு கொண்டது.



இந்நிலையில், இதே கோரிக்கையுடன் அலகாபாத் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் கோரக்பூர் மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News