செய்திகள்

பன்றிக் காய்ச்சல் பீதி: உ.பி. பள்ளிகளில் காலை இறை வழிபாடு நிறுத்தம்

Published On 2017-08-15 08:35 GMT   |   Update On 2017-08-15 08:35 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றில் இருந்து மாணவ-மாணவியர்களை பாதுகாக்க பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூளையழற்சி நோயை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் பரவ தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது, பொதுவாக, காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோயாக பன்றிக் காய்ச்சல் அறியப்படுவதால் பொது இடங்களில் அதிகமானவர்கள் கூடுவதை தவிர்த்தால் இந்த நோய் வேகமாக பரவுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதையடுத்து, பன்றிக் காய்ச்சல் தொற்றில் இருந்து மாணவ-மாணவியர்களை பாதுகாக்க பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதனால், நாளை (புதன்கிழமை) முதல் நிலைமை சீரடையும் வரை பள்ளிகளில் காலை நேரத்தில் நடத்தப்படும் கூட்டு இறை வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News