செய்திகள்

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தொடர் மரணம் - உ.பி. அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2017-08-14 12:28 GMT   |   Update On 2017-08-14 12:28 GMT
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உ.பி. அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான அறிக்கையை நான்கு வாரத்தில் சமர்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உ.பி. தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமாக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பது பற்றிய விவரங்கள் அந்த அறிக்கையில் இருக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சுமார் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக் கொண்டது. இந்த விபரீதம் காரணமாக 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதும், அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News