செய்திகள்

எஃகு கோட்டையில் விரிசல் விழாதா என எதிரிகள் காத்திருக்கின்றனர்: தொண்டர்களுக்கு சசிகலா எச்சரிக்கை

Published On 2017-08-13 05:19 GMT   |   Update On 2017-08-13 06:19 GMT
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிகலா, எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிரிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:

சொத்து குவித்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  

மேலும் அந்த கடித்தில், ‛‛வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர்.

இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் தினகரனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் சசிகலாவின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News