செய்திகள்

உத்தரகாண்ட்டில் பாரம்பரிய கல்லெறி திருவிழா - கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டதில் 300 பேர் காயம்

Published On 2017-08-07 19:02 GMT   |   Update On 2017-08-07 19:02 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாரம்பரிய கல்லெறி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவில், கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டதில் 300 பேர் காயம் அடைந்தனர்.
டெராடூன்:

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சியையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் சம்பவட் மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் பாரம்பரிய கல்லெறித் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் நடைபெற்ற கல்லெறி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பிறகு கல் மற்றும் பழங்கள் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு பகுதியினர் கற்களையும், பழங்களையும் எறிய, எதிர் திசையில் உள்ளவர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட கேடயங்களைக் கொண்டு தடுத்தனர். அதையும் மீறி சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

கல்லடி பட்டது தாங்கள் செய்த அதிர்ஷ்டம் எனவும், எங்களது ரத்தம் கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், காயமடைந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News