செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பலி

Published On 2017-06-05 23:54 GMT   |   Update On 2017-06-05 23:54 GMT
ஒடிசா மாநிலத்தில் அதிரடிப்படை வாகனத்தின் மீது மாவோயிஸ்டு நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில், மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படையினர் நேற்றுமுன்தினம் இரவு, கந்தமால் மாவட்டம் காமன்கோல் அருகே வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டைக்கு பிறகு, தங்கள் முகாம்களுக்கு வாகனங்களில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வாகனங்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில், லட்சுமிகாந்த் ஜானி என்ற அதிரடிப்படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார். 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

உடனே, சிறப்பு அதிரடிப்படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் 300 ரவுண்டு சுட்டனர். அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது கோழைத்தனமான தாக்குதல், வீரர்களின் தியாகம் வீண் போகாது’ என்று அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News