செய்திகள்

கெஜ்ரிவால் மீது புகார் கூறிய எம்.எல்.ஏ டெல்லி சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றம் - வீடியோ இணைப்பு

Published On 2017-05-31 11:22 GMT   |   Update On 2017-05-31 11:22 GMT
டெல்லி சட்டசபையில் இருந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் கூறிய அதிருப்தி எம்.எல்.ஏ மிஸ்ரா, குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் புதுடெல்லி ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக உள்ளார். 

முறையாக பணிகளை செய்யவில்லை என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கியதாக பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தார். 



இந்நிலையில், டெல்லி சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான ஒரு நாள் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். 

அப்போது தனக்கு பேச வாய்ப்பு வழங்குமாறு அவர் கூறினார். ஆனால் சபாநாயகர் கோயல் மிஸ்ராவை சட்டசபையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.  ஆம்.ஆத்மியின் இதர எம்.எல்.ஏ.க்களுக்கும் மிஸ்ராவுக்கும் இடையே சட்டசபையில் சலசலப்பு ஏற்ப்பட்டது. இதனால், மிஸ்ராவை வெளியேற்றுமாறு சட்டசபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்

இதனிடையே, டெல்லி சட்டசபையில் இருந்து மிஸ்ரா சில எம்.எல்.ஏ.க்களா குண்டுகட்டாக வெளியேற்றும் காட்சிகள் சில ஊடகங்களில் வந்தது. 

வெளியே வந்த மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “5-க்கும் அதிகமான ஆம் ஆதி எம்.எல்.ஏ.க்கள் தன்னை மார்பில் தாக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றியதகவும், இந்த சம்பவத்தின் போது கேமிராக்கள் அனைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்” தெரிவித்தார்

Tags:    

Similar News