செய்திகள்

காஷ்மீரில் வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிப்பு - துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் பிடிபட்டான்

Published On 2017-04-28 10:05 GMT   |   Update On 2017-04-28 10:05 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் அந்த வங்கியில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, துப்பாக்கிகளுடன் வந்த இரு மர்ம நபர்கள் காசாளரை மிரட்டி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். கொள்ளையர்களும் திருப்பி சுட்டனர். இதனால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். வங்கிக்குள் கூச்சலும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

கொள்ளையர்களில் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஒருவனை மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News