செய்திகள்

இந்தியாவிலேயே ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் எது தெரியுமா?

Published On 2017-04-28 00:33 GMT   |   Update On 2017-04-28 00:33 GMT
இந்தியாவில் லஞ்சம், ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று தனது ஆய்வினை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஊடக ஆய்வுகள் மையம் என்ற நிறுவனம் ஊழலால் பாதிக்கப்படும் மாநிலங்கள் குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை நேற்று அந்த நிறுவனம் வெளியிட்டது.
 
இதில் நாட்டிலேயே கர்நாடக மாநிலம் தான் பொது சேவையை பெறுவதில் ஊழல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 சுமார் 77 சதவீத புள்ளிகள் கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த ஆய்வின் படி கர்நாடக மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது.

68 சதவீதத்துடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 4-வது இடத்திலும், ஜம்மு-காஷ்மீர் 6-வது இடத்திலும் உள்ளன.

ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்காளம், அசாம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 20 மாநிலங்களில் கிராமம் மற்றும் நகரங்களை சேர்ந்த 3000 வீடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதே நிறுவனம் 2005-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஊழல் மலிந்த மாநிலமாக பீகார் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News