செய்திகள்

மாறுபட்ட அடையாளங்களுடன் 5, 10 ரூபாய் நாணயம் - ரிசர்வ் வங்கி விரைவில் வெளியீடு

Published On 2017-04-27 07:55 GMT   |   Update On 2017-04-27 07:55 GMT
மாறுபட்ட புதிய அடையாளங்களுடன் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
மும்பை:

அலகாபாத் ஐகோர்ட்டு தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயமும், தேதிய காப்பக கட்டிடத்தின் 125-வது நிறைவு விழா ஆகியவற்றை குறிக்கும் அடையாளங்களுடன் 10 ரூபாய் நாணயமும் அச்சிட்டு விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அலகாபாத் ஐகோர்ட்டு 150 ஆண்டுகள் என்ற லோகோ, தொடக்க மற்றும் நிறைவு ஆண்டுகள் அச்சடிக்கப்பட்டு நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல், 10 ரூபாய் நாணயத்தின் பின்புறத்தில் தேசிய காப்பக கட்டிட 125 ஆண்டு விழாவை குறிக்கும் லோகோ மற்றும் ஆண்டுகள்  குறிப்பிடப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, முன்னர் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்திகள் பரவிய நிலையில், அது வெறும் வதந்தியே என ரிசர்வ் வங்கி சொல்லியும் பல தரப்பினரும் அந்த நாணயத்தை இன்னமும் வாங்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News