செய்திகள்

லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-04-27 07:18 GMT   |   Update On 2017-04-27 07:18 GMT
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூகஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார்.

இதை தொடர்ந்து ஊழலை ஒழிப்பதற்காக காங்கிரஸ் ஆட்சியின்போது லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பா.ஜனதா ஆட்சியில் லோக்பால் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதுவரை லோக்பால் குழு அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

எதிர்கட்சி தலைவர்கள் இல்லாததால் லோக்பால் குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு கோர்ட்டில் விளக்கம் அளித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.


லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பியது. லோக்ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை தாமதப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா தெரிவித்தனர்.

லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Similar News