செய்திகள்

பா.ஜனதா முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை

Published On 2017-04-24 02:59 GMT   |   Update On 2017-04-24 02:59 GMT
பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

டெல்லியில் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்ற ‘நிதி ஆயோக்’ கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர், பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்தியில் தனது அரசு கொண்டு வந்ததுபோல், மக்களிடம் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் விதமாக மாநில அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும் என்றும் பொறுப்பை ஏற்க கூடிய அரசாகவும் செயல்படவேண்டும் எனவும் பா.ஜனதா முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்து இருப்பதால் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கவேண்டும் என்றும் பா.ஜனதா முதல்-மந்திரிகள் தற்போதைய உத்வேகம் குறைந்துவிடாமல் செயல்படும்படியும் அப்போது மோடி கேட்டுக்கொண்டதாகவும் பா.ஜனதா வட்டாரங்கள் கூறின.


Similar News