செய்திகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் 108 வயதான பழமையான கைதி ஜெயிலில் இருந்த விடுதலை

Published On 2017-04-15 00:05 GMT   |   Update On 2017-04-15 00:33 GMT
உத்தர பிரதேச மாநிலத்தின் பழமையான கைதியான 108 வயதான சவுதி யாதவ் ஜெயிலில் இருந்த விடுதலை செய்யப்பட்டார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தின் பழையமையான கைதி சவுதி யாதவ் ஜெயிலில் இருந்த விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்த குற்றத்திற்காக 108 வயதாகும் சவுதி யாதவ்வுக்கு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தில் கடந்த முறையில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி அவரை விடுதலை செய்ய பரிந்துரைத்திருந்தது.



உத்தர பிரதேச மாநில கவர்னர் ராம் நாயக்கின் அதிகாரத்தின் கீழ் சவுதி யாதவை விடுதலை செய்யக்கோரி, அளிக்கப்பட்டிருந்த மனுவை ஏற்ற கவர்னர் சவுதியை விடுதலை செய்ய அனுமதி அளித்தார். இதையடுத்து 14 வருடங்களுக்கு பின்னர் வாரணாசி ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட சவுதி யாதவ், தனது சொந்த ஊரான கோராக்பூர் மாவட்டத்தில் உள்ள பெலோன் கிராமத்திற்கு சென்றார். அங்கு தான் 96 வயதான சன்ரா தேவி என்ற அவரது மனைவி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News