செய்திகள்

புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா: ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் மோடி கருத்து

Published On 2017-03-29 17:41 GMT   |   Update On 2017-03-29 17:41 GMT
புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா என்று ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், ”ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றியதில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். புது வருடம், புதிய சட்டம், புதிய இந்தியா” என்று ஜி.எஸ்.டி குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

Similar News