செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது அடையாள அட்டை: மத்திய மந்திரி தகவல்

Published On 2017-03-28 23:54 GMT   |   Update On 2017-03-28 23:54 GMT
மாற்றுத்திறனாளிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் நல உதவிகள் மற்றும் ஒதுக்கீடுகளில் பயன்பெறுவதற்கு பொது அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 2 கோடியே 68 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களிடம் முறையான அடையாள அட்டை எதுவும் கிடையாது. இதனால் இவர்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பொது அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த அட்டை மாற்றுத்திறனாளிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் நல உதவிகள் மற்றும் ஒதுக்கீடுகளில் பயன்பெறுவதற்கு உதவும். இந்த அட்டைகளுக்கு அனைத்து மாநிலங்களும் அங்கீகாரம் அளிக்கும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பொது அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News