செய்திகள்

மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

Published On 2017-03-28 10:02 GMT   |   Update On 2017-03-28 10:02 GMT
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர்.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.

விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும், வறட்சியை சித்தரிக்கும் வகையில் எலியை வாயில் கவ்வியபடியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கு ஊதி தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.



அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவாவும் சென்றிருந்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அருண் ஜெட்லி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.

Similar News