செய்திகள்

சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் - தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பேரணி

Published On 2017-03-25 09:15 GMT   |   Update On 2017-03-25 09:15 GMT
தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார்.



சபாநாயகரின் இந்த முடிவை கண்டித்து அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐதராபாத் நகரில் இன்று பேரணி நடத்தினர். சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் ஐந்து பேரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது ஐதராபாத் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ.க தலைவர்கள், மாநில அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.

Similar News