செய்திகள்

ஆசிட் வீச்சில் சிகிச்சை பெறுபவர் அருகே செல்ஃபி: பெண் போலீஸ் சஸ்பென்டு

Published On 2017-03-24 20:35 GMT   |   Update On 2017-03-24 20:35 GMT
உத்தர பிரதேசத்தில் ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்ட பெண் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதான பெண் கற்பழிக்கப்பட்ட நிலையில் ஆசிட் குடிக்க வைக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் அருகே அமர்ந்து செல்ஃபி எடுத்து கொண்ட பென் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த பெண் போலீஸ் செல்ஃபி எடுத்து கொண்டுள்ள சம்பவம் குறித்தும், அவர்களின் நடத்தை குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 



பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட மூன்று பெண் போலீஸ் அதிகாரிகளும் சிரித்த முகத்துடன் பாதிக்கப்பட்டவர் அருகே அமர்ந்து செல்ஃபி எடுத்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு வந்திருந்து பாதிக்கப்பட்ட பெண் வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சில மணி நேரங்களில் குற்றம் செய்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Similar News