செய்திகள்

பாலியல் பிரச்சினைகள் குறித்து டுவீட் செய்ய மேனகா காந்தி வேண்டுகோள்

Published On 2017-03-23 14:18 GMT   |   Update On 2017-03-23 14:18 GMT
பெண்கள் தங்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து தனக்கு டுவீட் செய்யுமாறு, மத்திய மந்திரி மேனகா காந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
புது டெல்லி:

சமுதாயத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணியிடங்களில் பாலியல் அத்துமீறல், வரதட்சணை பிரச்சினை, ஆசிட் வீச்சு என பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க, #HelpMeWCD என்னும் ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் உருவாக்கியுள்ளார்.



தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி ஆகியவை ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அவர், மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்களை wcd@nic.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேனகா காந்தியின் இந்த புதிய முயற்சிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Similar News