செய்திகள்

தன் மகனை காப்பாற்ற சிறுத்தை மீது பாய்ந்து விரட்டி அடித்த பெண்

Published On 2017-03-22 22:15 GMT   |   Update On 2017-03-22 22:15 GMT
மும்பையின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையின் மீது பாய்ந்து அதன் பிடியில் இருந்து தன் மகனை போராடி மீட்ட தாய் பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மும்பை:

மும்பையின் வடபகுதியில், சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. அதையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள், ஒரு சிறுத்தைப்புலி நுழைந்து விட்டது. அப்பகுதியில் வசித்து வரும் பிரமிளா ரிஞ்சத் (வயது 23) என்ற இளம்பெண், சிறுத்தையை பார்த்து விட்டு ஓட்டம் பிடித்தார். அவரை பின்தொடர்ந்து, அவருடைய 3 வயது மகன் பிரணாயும் ஓடிவந்தான். முதலில், பிரமிளாவுக்கு அது தெரியாது.

திடீரென, பிரணாயை சிறுத்தைப்புலி தாக்கியது. அவனை காட்டுக்குள் இழுத்துச்செல்ல முயன்றது. அவனது அலறல் சத்தம் கேட்ட பிறகுதான், பிரமிளா விபரீதத்தை உணர்ந்தார். அவர் சிறிதும் தாமதிக்காமல், சிறுத்தைப்புலி மீது பாய்ந்து, தன் மகனை விடுவித்தார். அவர் போட்ட கூச்சலில் சிறுத்தைப்புலி பயந்து ஓடிவிட்டது.

கூச்சல் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், சிறுவன் பிரணாயை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 2 தையல்கள் போடப்பட்ட பிறகு, அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Similar News