செய்திகள்

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-20 19:13 GMT   |   Update On 2017-03-20 19:13 GMT
சுப்ரீம் கோர்ட்டில் வாமன் தத்தாத்ரே தாம்லே தாக்கல் செய்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில், வாமன் தத்தாத்ரே தாம்லே என்ற கணக்கு தணிக்கையாளர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சாதி, மதம், பாலினம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான எல்லாவகை இட ஒதுக்கீடும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘இட ஒதுக்கீடு என்பது முன்னேறிய சமூகத்தினருக்கு நிகராக நடக்க முடியாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தின் அடிப்படை விதிகளை கேள்விக்குள்ளாக்க முடியாது. உங்களின் அடிப்படை புரிதலே தவறானது. உங்களுடன் நாங்கள் உடன்பட முடியாது’ என்று கூறினர். 

Similar News