செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்கித் தராததால் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்த மாணவன்

Published On 2017-02-28 16:40 GMT   |   Update On 2017-02-28 16:40 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், தன் வீட்டில் ஸ்மார்ட்போன் வாங்கித் தரவில்லை என்பதால் 70 அடி கல்குவாரி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டத்தில் பரானா என்ற கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வைத்திருந்ததால், தானும் அதே போல் வாங்க வேண்டும் என தன்னுடைய பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில், இன்று தன்னுடைய பெற்றோரிடம் ஸ்மோர்ட் போன் கேட்டு சண்டையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்ததால் விரக்தியடைந்த அம்மாணவன், தனது தம்பியை அழைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு தனது தம்பியின் கண்முன்னே 70 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்தார்.



மாணவன் தற்கொலை குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மாணவனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஸ்மார்ட் போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News