செய்திகள்

கர்நாடகத்தில் 22-ந் தேதி முதல் சாலை போக்குவரத்து கணக்கெடுப்பு

Published On 2017-02-20 06:27 GMT   |   Update On 2017-02-20 06:27 GMT
கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் சாலைப் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் சாலைப் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து கர்நாடக பொதுப்பணி, துறைமுகங்கள் மற்றும் உள் மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் பொதுப் பணித் துறையால் நிர்வகிக்கப்படும் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகளின் கணக்கெடுப்பை கர்நாடக பொதுப்பணி, துறைமுகங்கள் மற்றும் உள்மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறை சார்பில் வருகிற 22-ந் தேதி காலை 6 மணி முதல் 24-ந் தேதி காலை 6 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கணக்கெடுப்பு 3,520 கணக்கெடுப்புச் சாவடிகளில் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள வெவ்வேறு வகையான சாலைகளில் வாகனப் போக்குவரத்தின் அளவை மதிப்பிடுவதுதான் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.

இதன் அடிப்படையில், சாலைகளின் தரம் மேம்படுத்தப்படுவது, சாலையை அகலப்படுத்துவது, தரையை உயர்த்துவது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும். கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்காக உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

2 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் பொது மக்கள் பங்கெடுப்பதோடு, கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News