செய்திகள்

ஜாதி, மத அடிப்படையில் ஓட்டு கேட்காத ஒரே கட்சி பா.ஜ.க.: மோடி பேச்சு

Published On 2017-02-19 10:17 GMT   |   Update On 2017-02-20 04:53 GMT
மற்றவர்கள் ஜாதி, மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பார்கள், ஆனால் வளர்ச்சியை சொல்லி நாங்கள் மட்டும் தான் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உ.பி. பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
லக்னோ:

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பதேபூர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரச்சார உரையாற்றினார். 

அப்போது மோடி பேசியதாவது:- 

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி சிலிண்டர் பிரச்சனையை கையிலெடுத்து வாக்கு கேட்டது. ஆனால் 1.15 கோடி 

மக்கள் தங்களது சிலிண்டருக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

என்னுடைய தாய் விறகை கொண்டு சமைத்து வந்தார். அது மோசமானது என்று நான் உணர்ந்து வந்தேன். அதனால் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டருக்கு இலவச இணைப்பு வழங்குவது என்று முடிவெடுத்தேன். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் 1.45 கோடி மக்களுக்கு இலவச இணைப்புகளை வழங்கியுள்ளோம்.

எல்.இ.டி பல்புகளில் பயங்கர ஊழல் நடைபெற்று வந்தது. ஒரு பல்பு ரூ.300-ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எல்.இ.டி. பல்புகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஒரு பல்பு ரூ.80-90க்கு விற்கப்படுகிறது.

எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் உங்களிடம் வந்து வாக்குகள் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் வளர்ச்சியை கூறி வாக்கு கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News