செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ‘கேவியட்’ மனு

Published On 2017-01-22 04:54 GMT   |   Update On 2017-01-22 04:54 GMT
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியது. இதற்கான அவசர சட்டத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ அமைப்பு வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Similar News