செய்திகள்

ஜெயலலிதா மரணம் சர்ச்சை: சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

Published On 2017-01-05 07:30 GMT   |   Update On 2017-01-05 07:30 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும் வழக்கு தொடர்ந்தார். தெலுங்கு அமைப்பு ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.

சசிகலா புஷ்பா தனது மனுவில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக மக்களிடம் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே அவற்றை வெளியிட வேண்டும்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. எனவே இதில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அது போல தெலுங்கு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Similar News