செய்திகள்

பங்கு பரிமாற்ற லாபத்துக்கு வரியா?: அருண் ஜெட்லி விளக்கம்

Published On 2016-12-26 02:51 GMT   |   Update On 2016-12-26 02:51 GMT
பங்கு பரிமாற்ற லாபத்துக்கு வரியா என்ற ஊடகங்களின் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “பங்குச்சந்தை மூலமாக லாபம் சம்பாதிக்கிறவர்கள், வரிகள் மூலமாக நாட்டை கட்டி எழுப்புவதற்கு கட்டாயம் பங்களிப்பு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். பங்கு பரிமாற்றங்கள் மூலம் வருகிற லாப வருமானத்துக்கு அதிகபட்ச வரிகள் விதிக்க இருப்பதையே அவர் இப்படி சூசகமாக உணர்த்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரதமரின் பேச்சை சில ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு அவ்வாறு வெளியிட்டுள்ளதாக கூறி உள்ளார்.

அத்துடன், “இது தவறானது. பிரதமர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அப்படி கூறவில்லை. பங்கு பரிமாற்றங்கள் வாயிலான நீண்டகால மூலதன ஆதாயம் மீது வரி விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை” என கூறி உள்ளார். 

Similar News