செய்திகள்

ராஜஸ்தானில் ஆயுள் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

Published On 2016-12-13 12:23 GMT   |   Update On 2016-12-13 12:23 GMT
ராஜஸ்தானில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ.வை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பி.எல்.குஷ்வா. 2012ம் ஆண்டு நரேஷ் குஷ்வா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சரண் அடைந்த பி.எல்.குஷ்வா நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மேலும், இவரது உதவியாளர் சத்யேந்திர சிங்கும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர்கள் மீதான கொலை வழக்கை விசாரித்த டோல்பூர் கோர்ட், இருவருக்கும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்கும் தகுதியை பி.எல்.குஷ்வா இழந்துவிட்டார்.

இந்நிலையில், கோர்ட் தீர்ப்பின் நகல் கிடைத்தையடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் கைலாஷ் மேஹ்வால் இன்று முறைப்படி அறிவித்துள்ளார்.

Similar News