செய்திகள்

அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-12-06 21:15 GMT   |   Update On 2016-12-06 21:15 GMT
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபலின் மகனும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலுமான அமித் சிபல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தாவின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

இருப்பினும், கெஜ்ரிவால் ஆஜராகமல் இருக்கும் பட்சத்தில் வழக்கு தாமதமாகும் என்கிற போது விசாரணை கோர்ட்டு இந்த உத்தரவை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். 

Similar News