செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை: நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2016-12-06 05:57 GMT   |   Update On 2016-12-06 05:57 GMT
மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார்.

ஜெயலலிதா மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘‘அப்போது சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர் ஜெயலலிதா’’ என்று மக்களவை சபாநாயகர் இரங்கலை தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த ஜெயலலிதா 1984 ஏப்ரல் முதல் 1989 ஜனவரி வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News