செய்திகள்

அசாமில் பழங்குடியினர் போராட்டத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு

Published On 2016-12-05 13:42 GMT   |   Update On 2016-12-05 13:42 GMT
அசாம் மாநிலம் கோக்ராஜர் நகரில் பழங்குடியின மக்கள் நடத்திய தீவிர போராட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
கோக்ராஜர்:

அசாம் மாநிலத்தில் ஆதிவாசி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி ஆதிவாசி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலை 6 மணியளவில் கோக்ராஜர் ரெயில் நிலையத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசாம் மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பின்னர் துணை கமிஷனர் அவர்களை சமாதானம் செய்தார். மேலும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்துவதற்காக அவர்களின் கோரிக்கையை மாநில அரசு, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். அதன்பிறகே ரெயில் போக்குவரத்து சீரானது.

மேலும், ஆதிவாசி தேசிய மாநாட்டுக் கமிட்டி, தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை துணை கமிஷனர் மூலம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவலுக்கு அனுப்பியுள்ளது.

Similar News