செய்திகள்

ராணுவம் குவிப்பு எமர்ஜென்சியை விட மோசமாக சூழ்நிலை: மம்தா குற்றச்சாட்டு

Published On 2016-12-01 14:22 GMT   |   Update On 2016-12-01 14:22 GMT
மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சுங்கச் சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதை மிகவும் மோசமான நடவடிக்கை என மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மோடியின் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது.

தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் மாநில அரசுக்கு தெரியாமல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம் என்று மம்தா மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மம்தா கூறுகையில் ‘‘பால்சிட் மற்றும் தங்குனி ஆகிய சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எமர்ஜென்சியை விட இது மிகவும் மோசமாக சூழ்நிலை.

இது கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் செயலாகும். ராணுவ குவிப்பு எதற்கு என்பதற்கான விவரத்தை அறிய விரும்புகிறோம். மேற்கு வங்காள தலைமை செயலாளர் இதுகுறித்து மத்திய அரக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் பேச ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நாட்டில் எமர்ஜென்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?.

ராணுவம் நம்முடைய சொத்து. அவர்களுக்காக நாம் பெருமயை அடையவேண்டும். பெரிய அளவில் தேசிய பேரழிவு, அடக்கமுடியாத வகுப்புவாத பிரச்சினை போதுதான் ராணுவத்தை வரவழைக்க வேண்டும். தற்போது இங்கு என்ன நடந்தது என்று எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியவில்லை. இது ஒரு சோதனைக்கான பரிசோதனை என்றால், மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Similar News