செய்திகள்

நாலந்தா பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

Published On 2016-11-25 09:59 GMT   |   Update On 2016-11-25 09:59 GMT
பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழக வேந்தர் ஜார்ஜ் யோ தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

பாட்னா:

பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜார்ஜ் யோ பதவி வகித்தார் . இவர் மீது நம்பிக்கை இன்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் போராட்டம் நடத்தினர்கள்.

இதை தொடர்ந்து ஜார்ஜ் யோ தனது வேந்தர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இவர் சிங்கப்பூர் முன்னாள் நிதி மந்திரி ஆவார். இவருக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாலந்தா பல்கலைக் கழக வேந்தராக இருந்தார். அவர் 2-வது தடவையும் அப்பதவி வகிக்க மறுத்து விட்டார். அதை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டார்.

Similar News