செய்திகள்

பெட்ரோலியம் டீலர்கள் காலவரையற்ற போராட்டம் வாபஸ்

Published On 2016-11-04 20:50 GMT   |   Update On 2016-11-04 20:50 GMT
கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட போராட்டத்தை பெட்ரோலியம் டீலர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
ஐதராபாத்:

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொள்முதல் செய்து ஆயிரக்கணக்கான டீலர்கள் அதனை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

இதனையடுத்து நேற்று டீசல் கமிஷன் தொடர்பாக மும்பை நகரில் எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பெட்டோலியம் டீலர்கள் அறிவித்துள்ளது.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News