செய்திகள்

ஏழை நோயாளிகளுக்கு உதவும் பெண் போலீசுக்கு பேஸ்புக்கில் 7 லட்சம் பாலோவர்கள்

Published On 2016-11-04 12:32 GMT   |   Update On 2016-11-04 12:32 GMT
ஏழை நோயாளிகளுக்கு பேஸ்புக் மூலம் நிதியுதவி பெற்று உதவும் பெண் போலீஸ் ஸ்மிதா சாண்டியை பேஸ்புக்கில் பின்தோடர்வோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஸ்மிதா சாண்டி மற்றவர்களைப் போல பேஸ்புக்கில் புகைப்படம் பதிவிடுவது, அரட்டையடிப்பது என இல்லாமல் ஏழை நோயாளிகளுக்கு உதவும் ஒரு தளமாக பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து ஏழை நோயாளிகளுக்கு உதவ குரூப் ஒன்றை ஆரம்பித்த சாண்டி இந்த இரண்டு வருடங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து ஸ்மிதா கூறுகையில் "ஆரம்பத்தில் எனது கோரிக்கைகளை ஏற்று உதவ யாரும் முன்வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பின் எனது பதிவுகளைப் பார்த்து உதவிகள் வர ஆரம்பித்தன. உதவி கேட்டு வருபவர்களை நானே நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு உண்மையிலேயே சிகிச்சை தேவையா? என கண்டறிந்து பேஸ்புக்கில் பதிவிடுகிறேன். எனது இந்த செயலில் நம்பிக்கை வைத்து ஏராளமான பேர் உதவி வருகிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்.

ஸ்மிதாவின் தந்தை சிவகுமார் சிகிச்சை செய்ய வசதியின்றி இறந்து போனதே ஸ்மிதாவின் உதவி மனப்பான்மைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News