செய்திகள்

அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தல்

Published On 2016-10-27 12:52 GMT   |   Update On 2016-10-27 12:52 GMT
அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியை முடித்துள்ள இளம் அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பயிற்சியை முடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவி செயலாளர்களாக பணியில் சேர உள்ளனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஒருபோதும் கொள்கைகளை மீறி இருக்கக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மோடி பேசியது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

தடைகளை உடைக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும். கூட்டு முயற்சியை கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய முடிவெடுக்கும் தன்மைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும்.

ஒன்று முடிகள் ஒருபோது தேசத்தின் நலனுக்கு எதிராக இருக்க கூடாது. மேலும் உங்கள் முடிவுகள் ஏழைகளுக்கு தீங்கு செய்யும் வகையில் இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News