செய்திகள்

கல்வி தகுதி இல்லை என்று புகார்: ஆந்திர சட்டசபை செயலாளர் மீது வழக்கு

Published On 2016-10-25 05:42 GMT   |   Update On 2016-10-25 05:42 GMT
ஆந்திர சட்டசபை செயலாளராக இருக்கும் சத்திய நாராயணராவ்வுக்கு கல்வி தகுதி இல்லை என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக சத்திய நாராயணராவ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகரி:

ஆந்திர மாநில சட்டசபை செயலாளராக இருப்பவர் சத்தியநாரயணராவ். இவர் செயலாளர் பதவிக்கு தேவையான கல்வி தகுதியுடன் இல்லை என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி புகார் கூறியது.

இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணரெட்டி கவர்னர், சபாநாயகர் ஆகியோருக்கு மனு கொடுத்தார்.

இந்த நிலையில் ஐதராபாத் ஐகோர்ட்டில் ராம கிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ சட்டமன்ற செயலாளருக்கு எதிரான வழக்கு ஒன்றை தொடுத்தார் அதில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற செயலாளர் பதவியில் நியமிக்கப்படுபவர் சட்டம் படித்து இருக்க வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் ஆந்திர சட்டசபை செயலாளராக இருக்கும் சத்திய நாராயணராவ் சட்டம் படிக்கவில்லை. அவர் பிளஸ் 2 மட்டுமே படித்து உள்ளார்.

எனவே அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட்டு சத்திய நாராயணராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 2 வாரத்திற்குள் கல்வி தகுதி சான்றிதழை தாக்கல் செய்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

Similar News