செய்திகள்

கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர் கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2016-10-22 22:10 GMT   |   Update On 2016-10-22 22:10 GMT
கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர் சி.பி.ஐ. கைது செய்தது
புதுடெல்லி:

மத்திய அரசின் ஓமியோபதி கவுன்சில் தலைவராக இருப்பவர் ராம்ஜி சிங். குஜராத்தில் புதிய ஓமியோபதி கல்லூரி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு அவரை அணுகியபோது, ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லி மஹிபல்புர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் லஞ்ச பணம் கைமாறியபோது, ராம்ஜி சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹரிசங்கர் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டார். 

Similar News