செய்திகள்

விமானக் கட்டணத்தைக் குறைக்கும் கூகுள் ப்ளைட்ஸ்

Published On 2016-10-20 15:21 GMT   |   Update On 2016-10-20 15:21 GMT
விமானக் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் கூகுள் ப்ளைட்ஸ் சேவையில் சில வசதிகளை கூகுள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலோனோர் பயணிக்கும் விமானத்தை கண்டறிவதற்காக கூகுள் ப்ளைட்ஸ் சேவையை ஏற்கனவே அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

உதாரணமாக விமானத்தில் நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள் எனில் பயணம் செய்யும் நாள்? இடம், எந்த விமானம் போன்ற தகவல்களை கூகுள் ப்ளைட்ஸில் கொடுத்து விட்டால் போதுமானது.

நீங்கள் இதனைப் பதிவு செய்தது முதல் நாள்தோறும் உங்களுக்கு விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கூகுள் நவ் சேவை மூலமாகவோ உங்களுக்கு அனுப்பி விடும்.

விமானக் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்குடன் உங்களுக்குக் கிடைப்பதால் குறைந்த கட்டணத்தில் விமானத்தைத் தேர்வு செய்து நீங்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் பயணிக்கப்போகும் தடத்தில் உள்ள விமானத்தின் கட்டணம் அதிகமாகப் போகிறதென்றால் அதனையும் கூகுள் ப்ளைட்ஸ் உங்களுக்குத் தெரியப்படுத்தி விடும்.

இதன் மூலம் அதிகக் கட்டணம் என்ற ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக சென்னை- டெல்லி என்ற விமானத் தடத்தில் பயணிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு விட்டால் அந்தத் தடத்தில் உள்ள எல்லா விமானங்களின் கட்டணங்கள் மற்றும் விமானங்களின் நேரங்கள் ஆகியவற்றை இது தெரியப்படுத்தி விடும்.

இதன் மூலம் நமது நேரமும் பணமும் மிச்சமாகும். இந்த சேவைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News