செய்திகள்

உத்தரபிரதேசத்தில் யாத்திரையின் போது ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது

Published On 2016-10-01 17:36 GMT   |   Update On 2016-10-01 17:36 GMT
உத்தரபிரதேசத்தில் யாத்திரையின் போது ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. இதனால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
ஆக்ரா:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 2,500 கி.மீ. தூர யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21–வது நாளான இன்று, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதியை அடைந்தார். மகாராஜா அக்ராசென் பிறந்தநாளையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார்.

பிறகு, யாத்திரையை தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின்ஒயர், அவரது இடது காதில் உரசியது. உடனே, ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. அவர் உடனே குனிந்து கொண்டார். இதனால் காயமின்றி உயிர் தப்பினார்.

அந்த நேரத்தில் ஜெனரேட்டர் மூலமாக மின்சப்ளை நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Similar News