செய்திகள்

கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-10-01 06:32 GMT   |   Update On 2016-10-01 06:32 GMT
மாணவர்களை தீவிரவாத குழுவில் சேர்ப்பதாக கூறிய கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரி:

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் தோகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் அக்பர்பாக் பகுதியில் எம்.எஸ்.ஜூனியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலையில் பிரவீண்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.

அதில் தான் பணிபுரியும் கல்லூரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாகவும், தீவிரவாத குழுவில் மாணவர்களை சேர்க்க முயற்சி நடப்பதாகவும் கூறி இருந்தார்.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு கல்லூரி நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வாரங்கல் எம்.ஜி.எம். கார்டன் பகுதியில் பிரவீண்குமார் லாரி மோதி பலியானார். அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.

பிரவீண்குமார், பேஸ்புக்கில் கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர் லாரி மோதி பலியானது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் பிரவீண்குமார் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு நிலவுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News