செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்வு; டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைப்பு

Published On 2016-09-30 15:50 GMT   |   Update On 2016-09-30 15:51 GMT
பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்வு. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  

முன்னதாக, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைக்கப்பட்டன.

Similar News