செய்திகள்

மெட்ரோ ரெயில் தொடக்க விழா: சமாஜ்வாடி-பா.ஜ.க போஸ்டர் யுத்தம்

Published On 2016-09-30 11:43 GMT   |   Update On 2016-09-30 11:44 GMT
மெட்ரோ ரெயில் அடிக்கல் நாட்டு விழா தொடர்பான போஸ்டர்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம்? என்பது தொடர்பாக சமாஜ்வாடி-பா.ஜ.க கட்சியினருக்கிடையே மோதல் வலுத்து வருகிறது.
கான்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நகர்ப்புற மேம்பாட்டு மந்திரி வெங்கய்யா நாயுடு மற்றும் கான்பூர் எம்.பி முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மெட்ரோ ரெயில் அடிக்கல் நாட்டு விழா உள்ளூர் மைதானமொன்றில் நடைபெறுவதால், இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவுக்கு வருகை தரும் அகிலேஷ் யாதவ் கையோடு மேலும் சில திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதனால் மெட்ரோ ரெயில் அடிக்கல் நாட்டு விழா தொடர்பான போஸ்டர்களில் சமாஜ்வாடி கட்சியினர் முதல்வர் அகிலேஷ் யாதவ்வை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரம் பா.ஜ.க கட்சியினர் கான்பூர் எம்.பி முரளி மனோகர் ஜோஷியை தங்களது போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.இதனால் இரு கட்சியினருக்கும் இடையேயான போஸ்டர் யுத்தம் முற்றி வருகிறது.

Similar News