செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: இல.கணேசன் மனு தாக்கல்

Published On 2016-09-30 07:58 GMT   |   Update On 2016-09-30 07:58 GMT
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் இல.கணேசன்.

பா.ஜனதா சார்பில் டெல்லி மேல்சபையில் எம்.பியாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா கவர்னராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள அந்த பதவிக்கு இல. கணேசனை தேர்வு செய்துள்ளனர்.

இதையடுத்து இல.கணேசன் இன்று மத்திய பிரதேச மாநிலத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.

மாநில சட்டமன்ற செயலாளரிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இல.கணேசன் அந்த மாநிலத்தில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்கிறது.

Similar News